நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பிறந்தநாள் இன்று…!

0
1034

ஈழத்தின் அழியாப் புகழ் பெற்ற புலவர்களில் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலை யாழ்ப்பாண நகரில் ஆஸ்பத்திரி
வீதியில் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம் தமிழர் பிரதேசம் என தற்காலத்தில் பறைசாற்றும் அடையாளங்களில் இந்த
சோமசுந்தரப் புலவரின்சிலை எதிர்காலத்திலும் பறைசாற்றும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

பிறப்பு: 25.05.1878
நவாலி,யாழ்ப்பாணம்.

இறப்பு: 10.07.1953
(அகவை 75)

சோமசுந்தரப் புலவர் தங்கத் தாத்தா என ஈழத்தவர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.

ஏறக்குறைய 15,000 செய்யுள்களுக்கு மேல் இயற்றியுள்ளார்.

“ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை” போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார்.

பலவகை பக்திப்பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

பனைகளின் பெருமைகளை கூறும் தால விலாசம், கதிர்காம கந்தனை கூறித் துதித்து பாடிய #கதிரைச் சிலேடை வெண்பா போன்றவை புகழ் பெற்றவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here