ஜூன் 7 வரை இலங்கை முடக்கப்படும்: வறிய மக்கள் பட்டினி அவலம்!!

0
516

கொரோனா தடுப்பு நடவடிக்கையைக் கருத்தில்கொண்டு பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் மூன்று நாள்கள் மட்டும் அதாவது, நாளை (25) மே 31 மற்றும் ஜுன் 4 ஆம் திகதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

இது வரவேற்கத்தக்கது. கொடிய நோயைக் கட்டுப்படுத்த இந்த முடக்க நிலை அவசியமானது.

நாட்டை முடக்கமாட்டோம் என அடம்பிடித்த அரசு கொரோனாவின் கோரத்தாண்டவத்தை உணர்ந்து தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால், பணம் உள்ளவர்கள் பொருட்களை வாங்குவார்கள். கூலித்தொழிலாளர்கள் என்ன செய்வது? அன்றாடம் கூலி வேலை செய்து சமைத்து உண்ணும் வறிய மக்கள் பட்டினி அவலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கூலித் தொழிலாளர்களுக்கு மட்டுமாவது நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here