இந்த ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் வரும் 26 ஆம் நாள்!

0
256

2021 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் எதிர்வரும் 26 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று இடம்பெறவுள்ளது. பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவில் படாத நிகழ்வே சந்திரகிரகணமாக நிகழ்கிறது.

இந்த நிகழ்வின்போது முழு நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

சூரியஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் செம்மஞ்சள் நிறத்திலிருந்து இரத்தச் சிவப்பு நிறங்களில் நிலவு காணப்படுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்திர கிரகணம் இலங்கை முழுமையாக அல்லது பாதியளவில் இலங்கைக்கு தென்படலாம் என்பதுடன் இறுதி சில நிமிடங்கள் இலங்கையர்கள் அதனை பார்க்கலாம் எனவும் ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் கூறியுள்ளது.

இலங்கையில் மாலை 6.23 முதல் இரவு 7.19 வரை 57 நிமிடங்கள் சந்திர கிரகணம் தென்படும்.

சந்திர கிரகணத்தை முழுமையாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here