பிரான்சில் மாவட்ட தேர்தலில் இணைந்து வரும் தமிழர்கள்!

0
547

எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் கடந்த காலங்களில் தமிழர்களும் இணைந்து தமது திறமையை வெளிக்காட்டி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

இம்முறை இத்தேர்தலில் பிரான்சு நாட்டில் Seine-Saint-Denis மாவட்டத்துக்கான இணை வேட்பாளராக Bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் இம்முறை UDI, Les Républicains, Libres ஆகிய கட்சிகளின் சார்பில் Bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதன் முறையாக செல்வி பிறேமி பிரபாகரன் என்ற இளம் தமிழ்ப்பெண் இணை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

செல்வி பிறேமி பிரபாகரன் அவர்கள் 2020ல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பொண்டி நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்று Bondy நகரசபை உறுப்பினராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் Bondy நகரசபையில் கடந்த மார்ச் 27ஆம் திகதி அன்று தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bondy மற்றும் Pavillons-sous-Bois தமிழ் மக்கள் செல்வி பிறேமி பிரபாகரன் அவர்களுக்கு தங்களுடைய முழு ஆதரவையும் வழங்கி தேர்தலில் வெற்றி பெறச்செய்து பிரான்சு நாட்டில் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் தளத்துக்கு அடித்தளம் இடவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here