நானு ஓயா தோட்டக்குடியிருப்பில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து நாசம்!

0
598

நானுஓயா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா சமர்செட் தோட்டப்பகுதியில் 10 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (23) காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள்  எரிந்து தீக்கிரையாகின.

இதில் 4 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளது.

இந்த வீடுகளில் குடியிருந்த 8 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் 2வது இலக்க நெடுங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இத்தீவிபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு காவல்துறையினால் அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட வாசிகசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here