தளபதி தீபன் பொறுப்பிலிருந்த G 10 போர் பயிற்சிக் கல்லூரியில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது.
22.05.2005 அன்று காலை பச்சை வண்ணம் அடித்து ‘உருமறைப்பு’ செய்யப்பட்ட பஜிரோ வாகனம் நான் தங்கியிருந்த ‘Tank View’ விடுதிக்கு வந்தது. தளபதி தீபன் தன்னுடைய வாகனத்தை எனக்காக அனுப்பியிருந்தார்.
அந்த வாகனத்தை ஓட்டிய போராளியின் பெயரும் புகழேந்திதான்..
அன்று முழுவதும் அங்கு ஓவியக் காட்சி நடைபெற்றது.
அங்குதான் சோதியா படையணி தளபதி துர்க்கா அவர்களும், அப்படையணிப் போராளிகளும் ஓவியக் காட்சியைப் பார்வையிட்டார்கள். நீண்ட கலந்துரையாடலும் நடைபெற்றது.
குறைந்தது 2000 போராளிகள் ஓவியக்காட்சியை பார்வையிட்டார்கள். அங்குதான் மிக முக்கியப் போராளி தினேஷ் அவர்களையும், அக்கல்லூரியின் முதல்வர் வீரப்பன் அவர்களையும் சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் அங்கு இருந்து பல நிலைகளிலும் நடைபெற்ற கருத்துப் பகிர்வு என் வாழ் நாளில் என்றும் மறக்க முடியாதது. நினைவில் நிலைத்து நிற்கக் கூடியது.
(ஓவியர் புகழேந்தி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து)