
இல்துபிரான்சுக்கு வெளியே அமைந்துள்ள நெவர் என்னும் பிரதேசத்தில்1ம் 2ம் உலகப்போரின் நினைவுத் தூபிக்கு முன்பாக நேற்று 20-05-2021 வியாழக்கிழமை மாலை 18.00 மணிக்கு பன்னாட்டுச் சங்கங்களுடன் இணைந்து நெவர் தமிழ்ச்சங்க இளையோர்களும் இணைந்து பலஸ்தீன நாட்டின் அமைதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட பன்னாட்டுச் சங்கப் பிரதிநிதிகள் தமிழ் இளையோர்களிடம் கலந்துரையாடிய பொழுது எமது நாட்டு நிலமைகளை கேட்டறிந்து கொண்டதுடன், தாங்களும் இனிவரும் காலங்களில் எமது போராட்டங்களில் கலந்து கொள்வாதகத் தெரிவித்துள்ளனர்.





