பிரான்சு நெவர் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெவர் பிராங்கோ தமிழ்ச்சங்கமும், நெவர் தமிழ்ச் சோலையும். இணைந்து கடந்த 18.05.2021 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 வரை இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை வாழிடப் பங்குத்தந்தை ஜோண் பபியோ அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை பிலிப்தாஸ் மரீனா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்திய பின்னர் வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர்களால் சுடர் வணக்கம், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மே 18 முள்ளிவாய்க்காலின் வலிகள் நிறைந்த எமது மக்களின் துயரினை உரைகள் மூலம் வாழிடப் பெண்மணி லில்லி, வாழிடப் பங்குத்தந்தை யோண் பபியோ மற்றும் திரு. காந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் சிறியவர்கள். பெரியவர்கள் உட்பட 30க்கு மேற்பட்ட அவ்வாழ்விடப் பிரதேச மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிழல்படங்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டு கவனயீர்ப்பு
நடைபெற்றது.