முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் நினைவேந்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அஞ்சலி செலுத்தியுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.