ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

0
536

ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் நான்காம்  தடவையாக சிறிலங்கா சுகாதார அமைச்சு,ரசரட்ட பல்கலைக்கழகம், சீனத்தூதரகம் ஆகிய  சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சற்று முன்னர் சைபர்
தாக்குதலை தமிழீழம் சைபர் போர்ஸ் மேற்கொண்டுள்ளது.

மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா சுகாதார அமைச்சு,ரசட்ட பல்கலைக்கழகம், சீனத்தூரகம் ஆகிய  சிறிலங்கா இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை நாம்ம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ஆம் ஆண்டு, 2018ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு மற்றும்
2020ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கோத்தபாயவின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சைபர் வழித்தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படை ஒன்றையும் அமைத்தநிலையில் இன்று அவர்களுக்கு தண்ணிகாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.health.gov.lk/moh_final/sinhala/

http://www.rjt.ac.lk/agri/news.php?nid=99

http://slemb.com/

http://www.health.gov.lk/moh_final/english/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here