பிரான்சில் 95 மாவட்டம் சார்செல் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 17.05.2021 திங்கட்கிழமை மாலை 18.00மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வில் மாநகர முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பொப்பினி அவர்களின் பிரதம செயலாளர் மற்றும் பிரான்சு இளையோர் அமைப்பு பொறுப்பாளர், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர், பரப்புரைப் பொறுப்பாளர், சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர், உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் பங்குபற்றினர். நினைவுரைகளும் இடம்பெற்றன. 18.45 மணிவரை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.