இன்று (17.05.2021) திங்கட்கிழமை பிரான்சில் நுவாசிலுசெக் என்னும் இடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
இதில் மாநகர முதல்வர் ஓலிவர் கலந்து கொண்டதுடன் உரையும் ஆற்றினார். இனவழிப்புக்கு உள்ளான தமிழ்மக்கள் பக்கம் தான் தான் எப்போதும் இருப்பேன் என்றும் வரும் 20ம் திகதி இதற்கான ஆதரவுத்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
நுவாசிலுசெக் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் சசிக்குமார் மற்றும் தமிழ்ச்சோலை நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.