இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.
. அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால் இன்றைய நிலவரத்தை அறிக்கையாக பிரெஞ்சுப்பிரமுகர்களுக்கு வழங்கியிருந்தனர். இங்கு வாழும் தமிழ் மக்களுடன் ஏனைய நாட்டு மக்கள் கலந்து கொண்டனர். இப்பிரதேசத்தில் சென்ற மாதம் தமிழீழத்திற்கு ஆதரவான ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.