அக்கினிக் கீலங்கள் எழுந்து ஆறாத துயராய் ஆனது எங்கள் தேசம்!

0
352

சிவப்பு மே….!

அரக்கர் கூட்டத்தின்
அராஜக அட்டூழியத்தால்
அன்று சிவந்தது தாயக வானம்.

பூக்களும் பிஞ்சுகளும்
காய்களும் பழங்களும்
பேதங்கள் ஏதுமின்றி
அழித்து எரிக்கப்பட்டன.

பொஸ்பரஸ் குண்டுகளால்
பொசுக்கினர் எங்கள் உறவுகளை
அக்கினிக் கீலங்கள் எழுந்து
ஆறாத துயராய் ஆனது
எங்கள் தேசம்.

எரித்து அழித்தாலும்
பீனிக்ஸ் பறவைகள்
சாம்பலில் இருந்து
மீண்டும் உயிர்த்தெழும்
மறவாதீர் மடையர்களே….!

சேரனும், சோழனும்,பாண்டியனும்
இல்லாமல் போன பின்னர்தான்
எல்லாள மன்னன் தோன்றினான்.

அவனுக்கு பின்னர் தோன்றிய
”இவனுக்கு” பின்னரும் தோன்றுவர்
ஆயிரம் ஆயிரம் மன்னர்கள்.

என்றோ ஒருநாள்
எழுவான் எங்கள் சூரியத் தேவன்.
அன்று இருள் அகலும்
ஆனந்த விடியல் பிறக்கும்!

அதுவரை அவர்களின்
நினைவுகளை ஏந்துவோம்.

ஆறாத் துயருடன்,
பிருந்தாபன் பொன்ராசா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here