செல்கின்ற வழியெங்கும் பிணங்களுக்கு மத்தியில் நகர்ந்தோம்!

0
408

அன்று மே 16 விடிகாலைப்பொழுது சரணடைய வேண்டும் என்பது உறுதியாகிவிட்ட போதிலும் எங்கே எப்படி என அறிந்திருக்கவில்லை. காலைவேளையில் சரணடைவதற்காக புதுக்குடியிருப்பு பக்கமாக நகர்ந்தோம். சரமாரியாக செல்வீச்சும் சன்னங்களும் வந்து கொண்டிருந்தன. செல்கின்ற வழியெங்கும் பிணங்கள்.

ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் இருந்து இருந்து நகர்ந்தோம். இறுதியாக புதுக்குடியிருப்புப் பக்கமாக இருந்த இறுதி எல்லையை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக அப்பாவை சந்திக்க நேர்ந்தது. அந்த இடம் அடுத்து ஒரு அபரிமிதமான யுத்தம் ஒன்றுக்குத் தயாரான இடமாக ஏதோ ஒரு மாயம் குடிகொள்ளப்போகும் இடமென்பது உணரக்கூடியதாய் இருந்தது.

அப்பா உடனடியாக எங்களிடம் இருந்த அவரது புகைப்படங்களை எடுத்துக் கிளித்து எறிந்துவிட்டு உடனடியாக வட்டுவாகல் பக்கம் செல்லும்படி சொன்னார். சிறிது தூரம் தானும் வந்தார். வருகின்ற வழியில் திடீரென ஒரு ஆர்பியி எறிகணை வந்து வெடித்தது நாங்கள் சிதறி ஓட ஆரம்பித்தோம் சாரை சாரையாக ரவைகள் வர ஆரம்பித்தன ஓட ஆரம்பித்தோம். ஆனால் இன்று நான் ஒன்றை உணர்கிறேன். அப்பா தான் வரித்துக்கொண்ட சத்தியத்தின் மீது தீராத பற்றுறுதி கொண்டிருந்தார். அதே போல் எங்களுக்கும் அதை சரியாகத் தந்திருக்கிறார். அதனாலேயே என்னமோ அப்பாவை எங்களுடன் வரச் சொல்லி அம்மாவோ, நானோ அழைத்து அப்பாவை தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கவில்லை………!

(நன்றி: தவபாலன் திருநிலவன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here