அல்-ஜெஸீரா செய்தி ஊடகத்தின் கட்டடம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு!

0
323

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள்
மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில்
அல் ஜெஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப் படைகள் இன்று ரொக்கெற் குண்டுத் தாக்குதல் நடத்தி யுள்ளன.கட்டடத்தைக் காலி செய்யுமாறு
அதன் உரிமையாளருக்கு அறிவித்தல்
விடுக்கப்பட்ட பிறகே அதனை தாக்கித்
தகர்த்திருக்கிறது இஸ்ரேல்.

சர்வதேச செய்தியாளர்களை அங்கிரு ந்து வெளியேறும் உத்தரவு விடுக்கப்பட்ட
ஒரு மணி நேரத்தின் பின்னர் அந்த
மாடிக் குடியிருப்புக் கட்டடம் மீது குண்டுகள் வீசப்பட்டன. கட்டடம் இடிந்துவிழும் காட்சிகளை அல்-ஜெஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
சர்வதேச செய்தியாளர்கள் எவருக்கும்
பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக் கப்படுகிறது.

கட்டடம் தரைமட்டமான காட்சிகளை ஒளிபரப்பிய அல் ஜெஸீரா தொலைக்
காட்சியின் அறிவிப்பாளர், “அல் ஜெஸீரா அடங்கி விடாது. அல்ஜெஸீராவை
மௌனமாக்கி விட முடியாது”-என்று
அறிவித்தார்.

கட்டடத்தை குண்டுவீசித் தகர்த்ததை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல், காஸாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்
கும் ஹமாஸ் படைகள் அந்ததக் கட்டடத்தை தமது இராணுவ ஆயுத மறைவிடமாகப் பயன்படுத்தி வந்தன
என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை காஸாவில் உள்ள அகதிகள்
முகாம் ஒன்று தாக்கப்பட்டதில் எட்டுக்
குழந்தைகள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
ஹமாஸ் இயக்கத்தினர் ஏவியவை எனக்
கூறப்படும் ரொக்கட் குண்டுகளால்
இஸ்ரேலியத் தலைநகர் ரெல்அவிவில்
ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

🔵அமெரிக்க விசேட பிரதிநிதி விரைவு

காஸாவில் மோதல்களை முடிவுக்குக்
கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்
காவின் விசேட பிரதிநிதி ஹேடி அம்ர் (Hady Amr) இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார்.

பலஸ்தீன நெருக்கடியில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்ற அமெ ரிக்கா வன்முறைகள் கட்டுப்பாட்டுக்
குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று
இஸ்ரேலியப் பிரதமரிடம் கேட்டிருக் கிறது.

ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் சிவிலியன்கள் மீதான தாக்குதல்களை
நிறுத்துமாறு இஸ்ரேலியப் பாதுகாப்புப்
படைகளையும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களையும் கேட்டிருக்கின்றார்.

கடந்த திங்களன்று ஆரம்பமான மோதல்களில் இதுவரை 139 பேர் வரை
உயிரிழந்துள்ளனர்.

🔴பாரிஸில் தடையை மீறி பேரணி

பலஸ்தீன ஆதரவு அமைப்புகளின்
பேரணிகளுக்குப் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தடை விதித்திருந்தது.
தடைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்
டிருந்த மனுக்களை நிர்வாக நீதிமன்றம்
(tribunal administratif) நிராகரித்ததுடன் தடை உத்தரவை உறுதிப்படுத்தி இருந்தது. எனினும் தடையை மீறி நூற்
ற்க்கணக்கானோர் நகரில் திரண்டு
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பாரிஸ்
18 நிர்வாகப் பகுதியில் (XVIIIe arrondis sement) ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில்
பிளாஸ்ரிக் கழிவு கொள்கலன்களுக்குத்
தீ வைத்தனர். அவர்களை அகற்றப் பொலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு களை வீசினர்.இதனால் பதற்றம் ஏற்பட்
டது.

பிரான்ஸின் பிராந்தியத் தலைநகரங்கள்
சிலவற்றிலும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டப்பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.
15-05-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here