மே18 நினைவேந்தல் தடைக்கெதிராக நீதிமன்றில் சட்டத்தரணி காண்டீபன்!

0
595

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் செய்வதை தடுப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொலிஸாரால் நேற்றைய தினம் தடை உத்தரவு கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் முதல் குரலாய் ஓங்கிஒலித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் அவர்களுடைய குரல்.

♦ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது 2009 இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட 147000 ஆயிரம் தமிழ் மக்களை நினைவு கூரும் நாளாக பார்க்க வேண்டும் இது பயங்கரவாத செயற்பாடு அல்ல கொரோனாவை காரணங்காட்டி நிகழ்வைத்  தடுக்கக் கூடாது 

♦குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்கு எந்தவகையில் அனுமதி வழங்கப்பட்டது? அதேபோல் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்
♦ஒரே நீதிமன்றில் இரண்டு நீதிகளா? முல்லைத்தீவு நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்ள முல்லைத்தீவு பொலிஸார் இரண்டு சட்டங்களை அமுல்படுத்த முயற்சிக்கின்றனர். சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சட்டமும் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்
♦இரண்டு தினங்களுக்கு முன்பு குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு முயற்சிகள் நடந்தபோது முல்லைத்தீவு பொலிஸாரால் முறைப்பாடு செய்யச் சென்றவர்கள் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

என்று இறுக்கமான வாதத்தை ஆரம்பித்துவைத்தவர் சட்டத்தரணி காண்டீபன்

தொடர்ந்து சிரேஸ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய அன்ரன் புனிதநாயகம் அவர்கள் வாதத்தை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது முல்லைத்தீவு சட்டதரணிகளும் வழக்கில் ஆஜராகியிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here