முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சின்னம் இரவோடு இரவாக அடித்து நொறுக்கப்பட்டு, நேற்று புதிதாகக் கொண்டு செல்லப்பட்டிருந்த நினைவுக் கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி நேற்று மாலை முதல் இராணுவம் பாதுகாப்பில் இருந்ததுடன், குறித்த பகுதி யாரும் நுழைய முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மக்கள் கடும் சீற்றம் கொண்டுள்ளனர். சிங்கள இனவாதத்தின் கோரமுகம் தொடர்ச்சியாக வெளிக்காட்டப்பட்டு வருகிறது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் சிங்களத்தின் கோரமுகத்தை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவர எழுச்சி கொள்ள வேண்டும் எனத் தமிழின உணர்வாளர்கள் கேட்டுள்ளனர்.
மீண்டும் ஆயுதம் தூக்கி போராட நினைக்கவில்லை. நாங்கள், எங்கள் தேசத்தில் அந்த நினைவுகளுடன் நிம்மதியாக வாழத்தான் ஆசைப்படுகிறோம். வேறு ஒன்றையும் இந்த சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்க்கவும் மாட்டோம் என முகநூல் பதிவு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.