மட்டக்களப்பில் கோரவிபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

0
266

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று (12) புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்குப் பயணித்த ஓட்டோவை, கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்குப் பயணித்த பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஓட்டோ சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த ஓட்டோ சாரதியான அழகப்பர் மதிராஜ் (49 வயது) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சடலம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி, களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here