மே 18 தமிழினப் படுகொலையை நினைவேந்த ஆயர் மன்றம் அழைப்பு!

0
438

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப்
போராடும் மக்களோடு இணைந்து வடக்கு – கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ஆம் திக
தியை இனப்படுகொலையை நினைவுகூரும்
நாளாகவும்செப நாளாகவும் அனுசரிக்கும்படி
யாக வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள்
அனைவரையும் விநயமாகக் கேட்டுள்ளது
வடக்கு – கிழக்கு ஆயர்மன்றம்.

இவ்வாறு தெரிவித்து வடக்கு – கிழக்கு
ஆயர் மன்றத்தால் அறிக்கை வெளி
யிடப்பட்டுள்ளது.
போரில் பலியானோரை நினைவுகூரும்
தினம் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்
பட்டுள்ள குறித்த அறிக்கையில் திரு
கோணமலை மறைமாவட்ட ஆயர் பேர
ருட்திரு கி. நோயல் இம்மானுவேல்,
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேர
ருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்
னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு
இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்
களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு
யோசப் பொன்னையா ஆகியோர்
கையயாப்பம் இட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின் முழு விபரம்
வருமாறு:-
மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின்
வடக்கு – கிழக்கு வாழ் மக்களுக்கு முள்
ளிவாய்க்கால் இனப் படுகொலையின்
பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும்.
இறுதிப் போரின்போது பலியானவர்க
ளுக்கு இறுதிக்கிரிகைகள்கூட செய்ய
முடியாது புதைத்துவிட்டு தப்பிப் பிழைத்து
வந்தவர்களும், அதற்குச் சாட்சிகளாக
இருக்கும் ஏனையவர்களும் பலியானவர்
களைக் கண்ணீரோடு நினைவுகூரும்
நாளாகும். இறந்தவர்களை நினைவு
கூரும் உரிமையுடைய நாளாகவும்
அந்நாள் இருக்கின்றது. படுகொலை செய்
யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனை
களும் துன்பங்களும் விடுதலை வாழ்
வுக்குத் தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்
றன.
இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி
கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து
வடக்கு – கிழக்கு ஆயர்களாகிய நாம் மே
18ஆம் திகதியை இனப்படுகொலையை
நினைவுகூரும் நாளாகவும் செப நாளா
கவும் அனுசரிக்கும்படியாக வடக்கு – கிழக்கு
வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் விந
யமாகக் கேட்டுக்கொள்கிறோம். அத்து
டன் இலங்கையில் கடந்த பல தசாப்தங்
களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்க
ளிலும் தமது உயிர்களை இழந்த அனை
வரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படி
யாகவும் கேட்டு நிற்கின்றோம்.
அனைத்துப் பங்குத் தந்தையர்க
ளையும், துறவறக் குழுமங்களையும், மத
நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்க
ளையும் கொரோனா சுகாதார நடைமுறை
களைக் கடைப்பிடித்து பின்வரும் அறி
வு று த் த ல் க ளைப்பின்பற்றுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
எதிர்வரும் மே 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மூவேளை செப மணியோசைஎழுப்புதல் மக்களைச் செபிக்க அழைத்தல், ஈகைச் சுடர் ஏற்றுதல், இரண்டு நிமிடஅக வணக்கம், இறந்தோர், பாதிக்கப்பட்
டோர், துன்புறுவோரை நினைத்து
மெளன செபம்; மாலை 6.15 – இறந்தோரை
நினைவு கூர்ந்து துக்க மணி ஒலித்தல்.
இவ்வேளையில் மக்கள் தங்கள் இல்
லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட
மெளன அஞ்சலி செய்யவும் செபிக்கவும்
அறிவுறுத்தவும் – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here