முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை விதித்த சிறிலங்காப் படை!

0
545

இலங்கையில் கொவிட் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என்று தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள், அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், தடைகளைத் தகர்த்து மக்கள் நினைவேந்தலை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here