
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள
பிரான்ஸின் ரியூனியன் தீவுக்கு அருகே
சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில்
இந்திய வைரஸ் திரிபு தொற்றியுள்ளது.
“பிரபு சகாவத்” (Prabhu Sakhawat) என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பலில் பதினொரு மாலுமிகள் வைரஸ் தொற்று
க்கு இலக்காகி உள்ளனர். கப்பல் பிரான்ஸின் நிர்வாகக் கடல் பகுதியில்
காணப்பட்டதால் கப்பலுக்கான அவசர மருத்துவ உதவிகளை ரியூனியன் வழங்கி உள்ளது. நோய்வாய்ப்பட்ட
நான்கு மாலுமிகள் மட்டும் அங்குள்ள
மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கா
கச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு
ள்ளனர் என்று ரியூனியன் பொலீஸ் தலைமையகம் ஓர் அறிக்கையில்
தெரிவித்திருக்கிறது.
இந்தியக் கொடியுடன் பிறேசில் நோக்கிச்
சென்றுகொண்டிருந்த அக் கப்பல் தற்சமயம் ரியூனியன் (Réunion) தீவுக்கு அருகே தரித்துள்ளது. கப்பலில் இருந்த 20 பணியாளர்களில் 11 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடையே தொற்றி இருப்பது B.1.617 எனப் பெயரிடப்படும்
இந்திய வைரஸ் என்பதை ரியூனியன்
பல்கலைக்கழக மருத்துவமனை உறுதிப்
படுத்தி உள்ளது.
அண்மையில் பிரான்ஸின் வடக்கு நகரான லூ ஹாவ் (Le Havre) துறை முகத்திலும் கப்பல் ஒன்றில் இந்திய வைரஸ் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தனர்.
(படம் :நன்றி Imaz Press Réunion)
குமாரதாஸன். பாரிஸ்.
09-05-2021