இலங்கையில் கோவிட் பரவலின் நான்காவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தினமும் 1500 க்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையினால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது வரையில் நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.