இலங்கையில் வெளியான 2020 க.பொ.த உயர்தர முடிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் வடக்கு முன்னோக்கி மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இம்முறை முடிவுகளின் படி வடமேல் மாகாணம் முதலாம் இடத்தையும் வட மாகாணம் 6ம் இடத்தை அடைந்தமையானது. கல்வியில் மீண்டும் முன்னிலை அடையும் நம்பிக்கையினை தந்துள்ளது.
குறிப்பாக கணித பாடத்தில் தமிழ் மாணவன் இலங்கையில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டமை கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள சைவப்பிரகாச வித்தியாலயம். பொலிசாரின் பயன்பாட்டிற்காக மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசாரின் கொரோனா தடுப்புச்செயல்பாடுகளிற்காக விசேடமாக அழைத்து வரப்படுகின்ற பொலிசாரே இங்கே தங்க வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விசேடமாக அழைத்து வரப்படும் 80 பொலிசார் இங்கே தங்க வைக்கப்படுவதாக தெரிவித்தே குறித்த பாடசாலை பெறப்பட்டுள்ளது.
பொலிசாரின் பாவனைக்காக பெறப்பட்டுள்ள பாடசாலை பொலிசாரின் இரண்டு வார கால பயன்பாட்டிற்கு எனக் கோரியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள சூழலில் கட்டடத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.