
சிங்கள பேரினவாத அரசின் மனிதாபிமானமற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சிறிலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்டு வவுனியாவில் புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கப்பட்ட பொதுமக்களில் அதிகளவான முதியோர் திடீரென இறக்கத்தொடங்கினர் ஏப்ரல் 1ஆம் நாளிலிருந்து 3 ஆம் நாளுக்குள் சுமார் 30 பேர் வரை இற்ந்து பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவித்தன.
மனிதாபிமானமற்ற சிறிலங்கா இராணுவத்தின் யுத்த்தின் பாதிப்புக்களால் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததை தாங்கிக்கொள்ள முடியாததினாலும் சரியான மருந்து மற்றும் பராமரிப்பு, கிடைக்காததுமே இந்த இறப்புகளுக்கு காரணம் என்று அன்றைய நாளில் சமூக நல அபை்புகள் கூறியது.