
இந்தியாவை ஆட்டம் காணவைத்த திரிபடைந்த கோவிட் 19 வைரஸ் இலங்கையிலும் அதிவேகமாகப் பரவிவருவதால் இலங்கையில் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்காதவர்கள் என சுமார் 30 பேர்வரை இன்று புதன்கிழமை மாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சந்தைகள், வர்த்தக நிலையங்கள் பலவும் சுகாதார விதிகளை மீறியதாகக் காரணங்காட்டி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.