யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் -04.05.2022 இன்றாகும்.
வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..
யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடலில் 1991 வைகாசி 4ம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.
1988 – 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர, உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஜயரத்தினா கூறியிருந்தார்.
இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன் விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்கா படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் அவர்களின் பெயரில் தமிழீழ போரியல் வரலாற்றில் “ஜெயந்தன் படையணியாக” தடை எனும் பகை மோதி பல களங்களில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்