
பொன்னாலையில் வீடு தீக்கிரையானதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளார்.
அவர்களின் அத்தியாவசிய உணவுத் தேவைக்காக ஒரு மூடை நெல், கற்றல் உபகரணங்கள் என்பவற்றோடு அவசிய தேவைக்காக ஒருதொகைப் பணமும் வழங்கினார்.

குறித்த குடும்பத்தின் வீடு தீக்கிரையானதில் குறித்த குடும்பத் தலைவர் அங்கம் வகித்த பொது அமைப்பொன்றின் பணம் உட்பட சுமார் 2 இலட்சம் ரூபா மற்றும் சொத்துக்களும் எரிந்து அழிந்தன என்பது குறிப்பிடத்கத்கது.