மூன்று நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜக்சாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆகியோர் சுமார் ஆறு மாதங்கள் விண்வெளியில் கழித்து விட்டே பூமிக்கு திரும்பியுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு திரும்பிய இவர்கள் புளோரிடா, பனாமா சிட்டியில் தரையிறங்கினர்.
இவர்கள் முன்கூட்டியே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்படவிருந்தபோது, புளோரிடாவில் நிலவிய மோசமான காலநிலையால் அந்தப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.
‘விண்கலத்தை அடைவது மற்றும் அதனை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இரு வேகப்படகுகள் உட்பட மீட்புக் கப்பல் குழு ஒன்று செயற்பட்டது’ என்று நாசா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ சோதனைகளுக்கு பின் புளோரிடாவில் இருந்து டெக்சாஸ், ஹூஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு முன்னர் கடைசியாக 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி முதலாவது நிலவுப் பயணத்திற்கு பின்னர் அப்பலோ-8 விண்வெளி வீரர்களே இரவு நேரத்தில் பூமிக்கு திரும்பி இருந்தனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவில் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடியாக ஒளிபரப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த வாரம் மற்றொரு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நான்கு வீரர்கள் உட்பட அந்த விண்வெளி நிலையத்தில் தற்போது ஏழு விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த 53 ஆண்டுகளில் முதல் முறையாக இரவு நேரத்தில் பூமியை வந்தடைந்துள்ளனர்.