
கலங்கிய விழிகளுடன்
கலைந்த கனவுகளுடன்
கனத்த இதயத்துடன்
கசங்கிய புடவையுடன்
கிடந்தோம் முள்ளிவாய்க்காலில்

சோர்ந்து போன முகத்துடன்
மனங்களில் பெரும் ரணத்துடன் கரங்களில் பெரும் கனத்துடன்
வயிற்றினில் தீரா பசியுடன்
வட்டுவாகலை களைத்தே
கடந்தோம் கிலியுடன்.

வாழ்க்கையில் ஒரு வெறுப்புடன்
வீழ்ந்திட்ட மன நிலையுடன்
மாவீரர்கள் கனவின் பெரு நினைவுடன்
விடுதலையின் பெரும் சுமையுடன்
விடை பெற்றோம் தீரா வலியுடன்

சிதைந்திட்ட பல இலட்சியத்துடன்
கதைத்திட பெரும் பயத்துடன்
புதைந்திட்ட பல ஆசையுடன்
இதயத்தில் பெரும் ஏக்கத்துடன்
நெஞ்சினில் பற்றிய பெருநெருப்புடன்
தொடரான ஒரு பயணத்தை
தொடர்ந்தோம் தொலைத்தோம்

முடிவு வரும் எனும்
நம்பிக்கையின் எதிர்பார்ப்புடன்
வலிகளுடன்
அருந்தமிழ்
02/05/2021