சிங்களப் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் எமது நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றோம்!

0
604

சிங்கள ஆளும்வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு , நசுக்கப்பட்டு , சுரண்டப்பட்டு வரும் சிங்களப் பாட்டாளி மக்களை நாம் ஒரு நேச சக்தியாகவே கருதுகிறோம் .

தமிழ் சிங்களப் பாட்டாளிகள் மத்தியில் வர்க்க ஒருமைப்பாடு ஏற்படுவதானால் தமிழரின் தன்னாட்சி உரிமையை சிங்களத் தொழிலாளர் வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும் . தமிழரின் தேசியவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவேண்டும் . ஆனால் அதே சமயம் தென்னிலங்கைப் பாட்டாளி வர்க்கமானது சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியமைப்பிற்கு முண்டுகொடுத்து நிற்கும் வரை தமிழ் – சிங்கள வர்க்க ஒருமைப்பாடு சாத்தியமாகப் போவதில்லை .

பேரினவாத சித்தாந்தப் பிடியில் இருந்து விடுதலை பெற்று விழிப்புணர்வு அடையும் பொழுது தான் தமிழரின் சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிகரத் தன்மையைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள் .

தமிழரின் விடுதலையில் தான் தமக்கும் விமோசனம் உண்டு என்ற உண்மையை உணர்ந்து கொள்வார்கள் .

பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி தினமாகிய இன்று நாம் ஒரு விதி செய்து கொள்வோம் . எந்தவித சவால்களை எதிர்கொண்ட போதும் எமது எமது இலட்சியப் பயணத்தில் உறுதி தளர மாட்டோம் என ஒரு வீரசபதம் செய்வோம் .

(தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின்
1992 உழைப்பாளர் தின அறிக்கையிலிருந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here