
அதிபர் மக்ரோன் பொது முடக்கக் கட்டுப் பாடுகளைத் தளர்த்துகின்ற விவரங்க
ளை நாளை வெள்ளிக்கிழமை காலை நாடெங்கும் பிராந்திய நாளிதழ்களில் வெளியாக இருக்கும் ஒரு விசேட செவ்வி மூலமாகவே அறிவிக்கவுள்ளார்
எனத் தெரியவருகிறது.
சுகாதாரக் கட்டுப்பாடுகளை படிப்படியாக
தளர்த்தும் தனது உத்திகள் அடங்கிய
கால அட்டவணையை மக்ரோன் நாளை
வெள்ளிக் கிழமை வெளியிடவுள்ளார்.
ஆனால் வழமை போன்று அவர் அதனை தொலைக்காட்சியில் தோன்றி வெளியிட மாட்டார். நாட்டு மக்களுக்கான அதிபரின்
அறிவிப்பு அன்று காலை பிராந்தியப் பத்திரிகைகளில் (presse régionale) விசேட செவ்வி வடிவில் வெளியாகும் என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
பத்திரிகைகளுக்கான அதிபரின் செவ்வி
ஏற்கனவே பிராந்தியப் பத்திரிகையாளர்
களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தக
வலை BFM தொலைக்காட்சி வெளியிட்
டுள்ளது.
கொரோனா நெருக்கடி தொடங்கியதில்
இருந்து நாட்டு மக்களுக்கான தனது முக்கிய உரைகளை மக்ரோன் தொலைக் காட்சி மூலமாகவே வெளியிட்டுவந்தார்.
ஆனால் இந்த தடவை தொலைக்காட்சி
உரையைத் தவிர்த்து பத்திரிகைப் பேட்டி
மூலம் ஒரே சமயத்தில் எல்லா பிராந்திய
ங்களிலும் வெளியிட ஏன் தீர்மானித்தார்
என்ற விடயம் இன்னமும் வெளியிடப்பட
வில்லை.
சனிக்கிழமை மே முதலாம் திகதி. தொழி
லாளர் தின விடுமுறைநாள். அன்றைய தினம் பிராந்திய அச்சுப் பத்திரிகைகள் வெளிவர மாட்டாது. எனவே வெள்ளி இரவு தொலைக்காட்சி மூலம் அதிபர் நாட்டுக்கு ஆற்றும் உரை மறுநாள் பத்தி ரிகைகளில் வெளிவர வாய்ப்பில்லை.
அதனைக் கவனத்தில் கொண்டே அதிபர்
தொலைக்காட்சி உரையைத் தவிர்த்து
பத்திரிகைகள் மூலம் நாட்டுக்கு விளக்கம் அளிக்க முடிவு செய்திருக்கிறார்.
இவ்வாறு பிரபல பிராந்தியப் பத்திரிகை
யான ‘Le Midi Libre’ தகவல் வெளியிட்டுள்
ளது.ஆனால் அதிபரது தொலைக்காட்சி உரை இடம்பெறமாட்டாது என்பதை எலி ஸே மாளிகை இன்னமும் உறுதி செய்ய வில்லை.
“நாட்டின் முக்கிய தீர்மானங்களை நாங் கள் எப்போதும் தலைநகரங்களில் இரு
ந்து கொண்டே எடுத்துவிடக் கூடாது. எங்
களது எல்லைகள், பிராந்தியங்களை
நோக்கியும் செல்ல வேண்டும். அங்கெ
ல்லாம் வசிப்பவர்களது குரல்களும் செவிமடுக்கப்பட வேண்டும்” – இவ்வாறு
மக்ரோன் சமீப காலமாக கருத்து தெரிவி
த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரதாஸன். பாரிஸ்.
29-04-2021