சுவிசில் சிறப்பாக நடைபெற்ற 24வது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

0
251

தமிழீழத் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தாயக விடுதலை வேள்வியில் தமது இன்னுயிர்களை உவந்தளித்து வீரச்சாவடைந்த எமது மண்ணின் மைந்தர்களான மாவீரர்கள் நினைவாக, 24வது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 04.07.2015 சனிக்கிழமை அன்று லுர்சேன் மாநிலத்தில் AllmendSüd மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

1

2

3

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
5

எதிர்கால சந்ததியினரிடம் மாவீரர்களின் அற்புதமான தியாக நினைவுகளை பேணவும், தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்க்க தாயகம் நோக்கிய தேடலுடன், விளையாட்டுக்களை ஊக்கிவித்து உணர்வை, நட்பை வளர்க்கும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டிகளில்; வளர்ந்தோர்இ இளையோர் மற்றும் சிறுவர் உதைபந்தாட்டங்களுடன், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் பல மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. 80 இற்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் தேசிய மாவீரர் நினைவு சுமந்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தோடு உணர்வுடனும், நட்புடனும் பங்குபற்றியிருந்தார்கள்.
6

அனைத்துக் கழக வீரர்களும் சிறப்பாக நட்புடன் விளையாடி தமது வெற்றிகளை பெற்றனர். வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துக் கழகங்களுக்கும், உறவுகளுக்கும், ஊடகங்களுக்கும் எமது நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
7

8

9

14

15

16

17

18

19

20

21

22

23

121

131

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here