அவசரமாக ஒக்சிஜன் தயாரிக்க ‘ஸ்டெர்லைட்’ ஆலை திறக்கப்படுகிறது: தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு அலை!

0
301

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்தி
ருக்கின்ற ஸ்டெர்லைட் செப்பு ஆலையை
(Sterlite copper plant) தற்காலிகமாகத் திற ந்து ஒக்சிஜன் தயாரிப்பதற்குத் தீர்மானி க்குப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உட்பட தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.ஒக்சி
ஜன் உற்பத்தி வேலைகளை அங்கு கண்
காணிப்பதற்கு குழு ஒன்றும் அமைக்கப்
பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த
திரிபுகளின் தீவிர பரவல் காரணமாக
இந்தியா முழுவதும் மருத்துவ ஒக்சிஜ
னுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
ளது. சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் இன்றி நோயாளிகள் உயிரிழக்கின்ற அவலம்
நீடிக்கிறது.

நீதிமன்ற உத்தரவின் கீழ் நீண்ட காலமாக
மூடப்பட்டிருக்கின்ற செப்பு ஆலையைத்
திறந்து ஒக்சிஜன் உற்பத்தியை தொடக்
குமாறு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
கள் குழு ஒன்று உத்தரவிட்டிருந்தது.

அதனையடுத்து தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்ட
த்தில் ஆலையைத் தற்காலிகமாக நான்
கு மாதங்களுக்குத் திறப்பது என்ற தீர்மா
னம் எடுக்கப்பட்டுள்ளது. ஆலையின் ஒக்சிஜன் தயாரிப்புப் பிரிவை மட்டுமே இயக்குவது என்றும் ஆலை தொடர்பாக அடுத்த தீர்மானத்தை நான்கு மாத காலத்தின் பின்னர் முடிவு செய்வது என
வும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்
டத்துக்கு அழைக்கப்படாத ‘நாம் தமிழர்’ போன்ற சில கட்சிகள் ஆலையைத் திறக்கவிடப் போவதில்லை என்று தெரி வித்துள்ளன.இதனால் தூத்துக்குடியில் ஆலை அமைந்துள்ள பகுதியில் பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணுக்கும் மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும்
பெருந் தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவு
களை வெளியேற்றுகின்ற “ஸ்டெர்லைட்” செப்பு ஆலை பொதுமக்கள் மற்றும் சூழல் பேணும் அமைப்புகளது தீவிர எதிர்ப்புகளை அடுத்து 2018 முதல் சீல் வைத்து மூடப்பட்டிருப்பது தெரிந்ததே.

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான
“ஆலையை யார் இயக்குவது என்பது முக்
கியம் அல்ல. அது ஏ, பி, சி என யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாட்டுக்கு இப்போது
ஒக்சிஜன் மிக அவசர தேவையாக உள்ளது” என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
26-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here