முல்லைத்தீவு – வட்டுவாகல், அக்கரைப் பகுதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் செல்வபுரத்தை சேர்ந்த சந்திரமோகன் நிஷாந்தன் (வயது-19), சம்பவத்தில் படுகாயமடைந்தவர் வட்டுவாகலை சேர்ந்த செல்வக்குமார் சயந்தரூபன் (வயது20) என்பவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இருவரும் நுங்கு வெட்டிக் குடிக்கச் சென்ற போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.