பிரான்ஸில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒரு வரைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்
திக் கொன்ற நபர் ஒருவர் சுடப்பட்டு
உயிரிழந்தார்.
பாரிஸ் நகருக்கு தென்மேற்கே Yvelines
மாவட்டத்தின் Rambouillet நகரப் பொலீஸ்
நிலையத்தில் இன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் இந்தச்சம்பவம் இடம்பெற்றது.
துனீசியா நாட்டுப் பிரஜையான நபர்
ஒருவரே பொலீஸ் நிலையத்தின் வாச லில் வைத்துப் பொலீஸ் உத்தியோகத் தரின் கழுத்தில் கத்தியால் பல தடவை கள் தாக்கினார் என்று கூறப்படுகிறது. அவசரமுதலுதவிப் படையினர் அங்கு வருவதற்குள் 49 வயதான பெண் உத்தி யோகத்தர் அந்த இடத்திலேயே உயிரிழ ந்தார்.
தாக்குதலாளியைக் கைது செய்ய முயன்ற சமயம் பொலீஸார் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் அவரும் கொல்லப்
பட்டார் என்று தகவல் வெளியாகி இருக்
கிறது. பிரதமர் Jean Castex, உள்துறை அமைச்சர் Gérald Darmanin இருவரும்
சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்கின்
றனர் என ஊடகங்கள் குறிப்பிட்டன.
சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கி
ன்ற அமைதியான Rambouillet நகரில்
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
23-04-2021