
தென்மராட்சி – கொடிகாமம், பாலாவி காட்டு பகுதியில் இன்று (21) முன்னிரவு கள்ள மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்த எடுத்த முயற்சி பலனளிக்காமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் ரயர் ஒன்றில் சன்னம் துளைத்தமையால் அது காற்றுப் போய் காணப்படுவதாகத் தெரியவருகிறது.
உழவியந்திரத்தை இயக்கிச் சென்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதால் அவர்களைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.