
இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுய
தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொ
ள்ளவுள்ளனர்.
பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற
தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென்
ஆபிரிக்கா போன்ற தீவிர திரிபுத் தொற்றுள்ள நாடுகளுடன் இந்தியாவை
யும் சேர்ப்பதற்கு பிரான்ஸ் முடிவு செய்து
ள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற
சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்
தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்ப
தாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல்
அட்டால் தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் வெளிநாடு
களுடனான எல்லைகளை நீண்டகாலம்
மூடி உள்ளது. எனினும் பிரான்ஸ் போன்ற
நாடுகளில் வதிவிட உரிமை பெற்ற மற்
றும் , தொழில் வீசாக்களில் தங்கியுள்ள
இந்தியர்கள் நாடுகளிடையே தொடர்ந்து
பயணம் செய்து வருகின்றனர்.
பிறேசிலுக்கு அடுத்த படியாக உருமாறிய
வைரஸ் காரணமாக இந்தியாவில் தொற்
றுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகி
ன்றன. பிரித்தானியாவும் ஏற்கனவே இந்
தியப் பயணிகளது வருகையைத் தடை
செய்துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஆகியோர் இந்தியா
வுக்கு மேற்கொள்ள இருந்த பயணங்களை ரத்துச் செய்துள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
21-04-2021