மன்னாரில் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
278

ஈஸ்டர் பயங்கரவாதத்தின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இன்று முன்னெடுக்கப்ப்பட்டது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக இறை பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலுள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி:உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here