
பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.
படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது-31) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
வழமைபோன்று சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.