வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தமிழீழத் தாயவள் தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டது. இதன்போது தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உறவினர்கள்..“இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான சனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள். அவரது விருப்பத்தை அடைவதற்கு, அமெரிக்கா, தமிழர் சிக்கல்களில் அக்கறை செலுத்த வேண்டும்!” என்றனர்..