மனைவியை எரித்து கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை: மகனின் தெளிவான சாட்சியை அடுத்து நீதிபதி தீர்ப்பு!

0
185

thee2008 ஆம் ஆண்டில் சாவகச்சேரியில் தனது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த நபருக்கு நேற்று 7 வருடங்களின் பின் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ். சிவில் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி கனகா சிவபாதசுந்தரம் நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 5 பிள்ளைகளின் தாயான தவமணி என்ற பெண்ணையே (மனைவி) வேலன் மகான் என்ற நபர் (கணவர்) எரித்துக் கொலை செய்துள்ளார்.

இவருக்கு எதிராக சம்பவத்தை நேரில் கண்ட மகனே சாட்சியளித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு 11 வயதாக இருந்த மகான் அனுஷன் என்ற சிறுவன் 14 வயதிலும் தெளிவாக சாட்சியமளித் திருந்தார். அன்று நடந்த சம்பவத்தை மீண்டும் நீதவான் முன்னிலையில் தெரிவிக்கும்போது மிகத் தெளிவாக மகன் சாட்சியமளித்தார்.

தாயிடம் பணம் கேட்டு சண்டை பிடித்த தந்தை பணம் தர மறுத்த தாயின் மீது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றியபோது தாய் கத்திக்கொண்டு வெளியே ஓடியுள்ளார்.

வெளியே ஓடித் தப்பினால் தூங்கிக் கொண்டிருக்கும் தனது இரண்டு தம்பிமாரையும் தூக்கி கிணற்றில் வீசுவதாக தந்தை பயமுறுத்தவே தாயார் மீண்டும் வீட்டுக்குள் ஓடிவந்துள்ளார்.

இச்சமயம் தந்தை தாயின் மீது நெருப்பை வைத்து எரித்ததாவும் மகன் சாட்சியமளித்துள்ளார்.

இதனை யடுத்து சந்தேக நபரான தந்தைக்கு நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

2008 ஜுலை மாதம் 9 ஆம் திகதி இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here