அனந்தி சுயேச்சையாக களமிறங்க திடீர் முடிவு: யாழ்ப்பாணத்தில் நேற்று கட்டுப்பணம்!

0
143

ananthi_sasitharan_lankaவடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் யாழ். மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் பொருட்டு இதற்காக அவர் நேற்றையதினம் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட தனக்கு அனுமதி வழங்குமாறு கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை சென்றிருந்த அனந்தி சசிதரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து தனக்கு போட்டியிட அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார். இது குறித்து கவனம் செலுத்துவதாக அவர் உறுதிமொழி வழங்கியிருந்த போதும் எனினும், அவருக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் அவருக்கு இடமொதுக்க முன்வந்தபோதும், மாவை சேனாதிராஜா காட்டிய எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் விண்ணப்பிக்காத நிலையில், அனுமதி வழங்கப்படவில்லையென அனந்தி கூறி வருவதாக மாவை சேனாதிராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்கள் தொடர்ந்தும் பாராளுமன்றம் செல்லுமாறு அனந்தி சசிதரனை வலி யுறுத்தி வருவதாகவும், இதனை ஏற்று சுயேச்சை யாகப் போட்டியிட அனந்தி தீர்மானித் திருப்பதாகவும் தெரிய வருகிறது.

தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தனக்கு இடம்வழங்காததுடன், கூட்டமைப்பின் இடஒதுக்கீட்டில் பெண்களுக்கு சரியான இடம் வழங்கப்படாத நிலையிலேயே தான் சுயேச்சையாகப் போட்டியிட தீர்மானித் ததாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here