மட்டுவில் தடைகளுக்கு மத்தியில் அன்னைபூபதி அவர்களின் நினைவேந்தல்!

0
470

வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகொள்ளப்படுகிறது.

அந்தவகையில் மட்டக்களப்பிலும் அன்னை பூபதி அவர்களின் 33வது நினைவேந்தல் சிறிலங்கா பேரினவாதத் தடைகளுக்கு மத்தியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது..

பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் மட்டு.மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மட்டு.மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா, இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் காத்தான்குடி காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவுடன் அப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் நிகழ்வு நிறைவடைந்ததும் அங்கு வருகைதந்திருந்த அனைவரும் திரும்பி சென்றதன் காரணமாக காவல்துறையினர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here