யாழ். சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சாவளை இயற்றாலை வரணி
யைச் சேர்ந்த தவராசா டினோஜன் என்ற 19
வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: –
தனது தோட்டத்தில் உள்ள கீரையை கடை
களுக்கு வழங்குவதற்காக முன் அனுமதி கேட்கச் சென்றவேளை கடந்த 15 ஆம் திகதி இவரது மிதியுந்துடன் உந்துருளி மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய
சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
குறித்த இளைஞன் நேற்று மரணம் அடைந்
துள்ளார். இவரது உடற்கூற்றுப் பரிசோத
னையைத் தென் மராட்சி வலய திடீர் மரண
விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்
குமார் மேற்கொண்டார்.