வாழ்வின் கடைசி நிமிடம் வரை மக்களை விழிப்பூட்டும் கருத்துக்களை கொண்டு வாழ்ந்தவர்!

0
287

“.. ஆயிரம் பெரியார்கள் பிறந்து வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா..”

“.. இண்டைக்குச் செத்தா நாளைக்குப் பால்…”

இவை போன்ற பல சமூக சிந்தனை தூண்டும் நகைச்சுவை வசனங்களால் அறியப்பட்டவர் மறைந்துவிட்டார்.

கடந்த வியாழனன்று தமிழ்நாடு அரசின் சிறப்புத் தூதராக அரச மருத்துவமனை
யில் பகிரங்கமாகத் தடுப்பூசி ஏற்றிக் கொண்டார். பொதுமக்கள் தயக்கம் இன்றி ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வூட்டி உரையாற்றி னார். தடுப்பூசி பற்றிய அவரது பேச்சின் வீடியோ சமூக வலைத் தளங்களில்
பகிரப்படுகின்றது.மறுநாள் வெள்ளிக்
கிழமை திடீரென மூச்சிழந்து மருத்துவ
மனையில் சேர்க்கப்படுகிறார்.சனிக்கி ழமை விடிகாலை உயிரிழந்து போகிறார்.

தனது வாழ்வின் கடைசி நிமிடம் வரை
மக்களை விழிப்பூட்டும் கருத்துக்களை
கொண்டு வாழ்ந்தவர் விவேக். ஆனால்
தடுப்பூசி ஏற்றி அடுத்த நாளே விவேக் திடீரென மயக்கமடைந்ததும் வடபழனி
SIMS மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
24 மணித்தியாலங்களுக்குள் உயிரிழந் தமையும் அவரது ரசிகர்கள் உட்பட சாதா
ரண மக்களிடையே கேள்விகளை எழுப்
புவது தவிர்க்க முடியாதது.

விவேக்கின் மரணத்துக்கு தடுப்பூசியே
காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான்
போன்றவர்கள் மருத்துவமனைக்கு
முன்பாக நின்று குற்றச்சாட்டிக் குரல் எழுப்பி இருக்கின்றனர்.

உலகெங்கும் அஸ்ராஸெனகா போன்ற தடுப்பூசிகள் உருவாக்குகின்ற இரத்தக் கட்டிகள் காரணமாக மரணங்கள் பதி
வாகி வருகின்றன. இந்த நிலையில்
விவேக்கிற்கு ஏற்பட்ட லேசான உயர் இரத்த அழுத்தத்துக்கும் (mild elevated blood pressure) அவர் ஏற்றிக் கொண்ட
வைரஸ் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை
என்று அவருக்குச் சிகிச்சை அளித்த
மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருதயச் சிகிச்சைகளுக்காக ஒரு நாளே
னும் மருத்துவமனை சென்றிராதவர் ஊசி ஏற்றிய மறுநாள் இருதயம் செயலிழந்து உயிரிழந்திருக்கிறார். பிரபலமான ஒருவரது இத்தகைய திடீர் சாவு சாதாரணமானவர்களிடையே ஊசிகள் பற்றிய அச்சங்களை எழுப்பவே
செய்யும். தடுப்பூசிகள் மீதான நம்பிக்கை களை உருவாக்கும் முயற்சிகளுக்குப் பலத்த பின்னடைவை அது ஏற்படுத்த லாம்.ஆனால் திக்குத் தெரியாத தொற்று நோயின் பயணத்தில் முடிவற்றுத் தொடர்
கின்ற அவலங்களின் நடுவே மனித குலத்தின் முன் உள்ள ஒரே நம்பிக்கை
இந்தத் தடுப்பூசி தான்.

58 வயதான நடிகர் விவேக் 1950, 60 களில் தமிழக சினிமாவில் கோலேச்சிய நகைச்சுவைச் சிந்தனையாளர் என். எஸ்
கிருஷ்ணனின் பெயரில் “சின்னக் கலை
வாணர்” என்று அழைக்கப்பட்டுவந்தவர்.
விவேகானந்தன் என்ற பெயரில் ஓர் அரசுப் பணியாளராக அறியப்பட்ட விவேக் 1987 இல் “மனதில் உறுதிவேண் டும்” என்ற படத்தில் சிறு பாத்திரம் ஒன் றின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். 1990 களில் விவேக் தோன்றி நடித்த நகைச்சுவைப் பாத்திரங்கள் அடுத்த சில தசாப்த காலப்பகுதியில் அவருக்குத் தமிழக சினிமாவில் அசைக்க முடியாத ஓர் தளத்தைப் பெற்றுக் கொடுத்தன.

‘ரன்’ , ‘பேரழகன்’ ,’ தூள்’ , ‘அந்நியன்’ , ‘சிவாஜி’ போன்ற படங்களில் விவேக் வழங்கிய நகைச்சுவைப் பாத்திரங்கள் அவருக்கு மிகுந்த பிரபல்யத்தை உருவா
க்கின. விழிப்புணர்வு மிகுந்த கருத்துக் களை நாசூக்காக நகைச்சுவையுடன் வசனங்களாக்குவதிலும், பிரபலமானவர் களது குரல்களில் மிமிகிரி பண்ணுவதி லும் விவேக் தனித்திறமை கொண்டிருந் தார். அவர் கதாநாயகனாகத் தோன்றி நடித்த படம் “சொல்லியடிப்பேன்”.

கடைசியாகத் தற்போது “புதுப்புது அர்த் தங்கள்” என்ற பெயரில் ஒரு படத்ததை
தயாரித்து வந்தார். அதன் இடைநடுவில்
சினிமா உலகம் அவரை இழந்திருக் கிறது.

2009 இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ
விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது.
இந்திய அணு அறிவியலாளரும் முன்
னாள் ஜனாதிபதியுமாகிய ஏ.பி. ஜே.
அப்துல் கலாம் அவர்களின் கொள்கை
களையும் தனது சினிமா மூலம் பரப்பி வந்தவர். அப்துல் கலாமின் வேண்டு
கோளை ஏற்றுப் பசுமை இயக்கம் ஒன்றை தொடக்கினார். தமிழகம் எங்கும்
லட்சக்கணக்கான மரங்களை நடுகை
செய்தார். அதன் மூலம் ஒரு சூழலியலா ளராக முழு இந்தியாவினதும் கவனத்தை
ஈர்த்தார்.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களுக்கும்
சூழல் பேணும் விழிப்புணர்வுக்கும்
நடிப்பை ஒரு நிஜமாகப் பயன்படுத்தி
யவர். மரங்களை நட்டு ஒக்சிஜனைப்
பெருக்கியவர். தொற்று நோய்களுக்கும்
இயற்கை அழிவுகளுக்கும் காரணமான
சூழல் கட்டமைப்பு அழிவைத் தடுப்பதற்
காக இறுதிவரை உழைத்தவர். மூளைக் காய்ச்சல் காரணமாகத் தனது ஒரே புதல்வனைப் பறிகொடுத்து நொந்து போன நிலையிலும் “கிறீன்கலாம்” மரம் நடும் இயக்கத்தைச் சளைக்காது தொடர் ந்தவர்.

சிறந்த நடிகர் என்பதற்கும் அப்பால் ஒரு சூழல் காப்பாளராக அவரை நினைவு கூர்வதே இன்றைய நிலைமையில் மிக அவசியமாக உள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
17-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here