சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

0
224

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
image
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டது.
image
தமிழ் மக்கள் மீது கடந்த காலம் தொட்டு தொடர்ச்சியாக இற்றைவரை சிங்கள அரச பேரினவாதத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் இன அழிப்பின் சாட்சியாகக் கொண்ட இது இனப்படுகொலையா இல்லையா! என்ற ஆவணப்படத்தின் தொகுப்பு வெண்திரையில் காண்பிக்கப்பட்டதுடன், எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் இனஉணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்களுடன் கவியரங்கமும் இடம்பெற்றது.
image
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

image
image
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சிய பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டும் 21.09.2015 அன்று ஜ.நா நோக்கி அணிதிரண்டு தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்க ஆயத்தமாகுமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here