உணவகம் திறக்கும் கால அட்டவணை ஆராய்வு: மாத இறுதியில் மக்ரோன் உரை?

0
642

உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் சினிமா போன்றவற்றைப் படிப்படியாகத் திறப்பதற்குரிய கால அட்டவணை குறித்து எலிஸே மாளிகையில் நாளை வியாழக்கிழமை மாலை உயர்மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட வுள்ளது.

மூடப்பட்டிருக்கும் இடங்களைத் திறப்ப தற்கான ஒழுங்கு நெறிமுறைகள் வகுக்
கப்பட்ட பிறகு அது குறித்து விளக்கமளி ப்பதற்காக அதிபர் மக்ரோன் இம்மாத
இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்
றுவார் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்க உயர்வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன.

உணவகம், ஹொட்டேல்கள் போன்ற
தொழில் துறையினருடன் அமைச்சர்கள்
ஏற்கனவே நடத்தியுள்ள கலந்துரையாட ல்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனை
கள் எலிஸே மாளிகையில் அதிபர் மக்
ரோன் தலைமையில் இடம்பெறவுள்ள
கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன. அந்த யோசனைகளின் அடிப்படையில் கால அட்டவணை ஒன்று வகுக்கப்பட்டு அதன்
படி மூடப்பட்டுள்ள இடங்கள் (établisse ments fermés) அனைத்தும் படிப்படியாகத் திறக்கப்படும்.

இவ்வாறு பாரிஸ் ஊடகங்கள் தெரிவித் துள்ளன.

🔵பிராந்திய சபைகளுக்கு
ஜுன் மாதம் தேர்தல்கள்

இதேவேளை,

நாட்டின் பிராந்தியங்களுக்கான தேர்தல்களை குறிக்கப்பட்ட தினத்துக்கு ஒருவாரம் தாமதமாக எதிர்வரும் ஜூன் மாதம் 20,27 ஆம் திகதிகளில் நடத்துவ
தற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து
ள்ளது. தேர்தலை ஜூனில் நடத்துவதற்கு
ஆதரவாக 443 வாக்குகளும், எதிராக 73
வாக்குகளும் பதிவாகின.

தடுப்பூசி ஏற்றும் பணிகளை தடையின் றித் தொடர்ந்து முன்னெடுக்க வசதியா கவே தேர்தல் ஒருவாரம் தாமதமாக நடத்தப்படவுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.
14-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here