‘நவாலி படு­கொலை’ – ஆலய வீதி­களில் ஆறு­த­ல­டைந்த மக்­களின் குருதி ஆறாக ஓடிய நாள் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று !

0
795

n209.07.1995இல் இடம்­பெற்ற நவாலித் தாக்­கு­தலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்­றாகும். வர­லாற்றில் இந்த இரத்­தக்­கறை படிந்த நிகழ்வை மறக்­க­முடி­யாது.
முன்னாள் அர­சாட்­சி­யா­ளர்­களின் பணிப்­பு­ரையின் பேரில் நடத்­தப்­பட்ட விமானத் தாக்­கு­தலில் பலி­யெ­டுக்­கப்­பட்ட 20ஆம் ஆண்டு நினைவு நாளை 2015இல் நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப் பார்க்­கின்றோம்.
இந்தக் கொடு­மை­யான நவாலி சென்ற்.பீற்றர் ஆலய பலி­யெ­டுப்பு சர்­வ­தேச சமூ­கத்­தையே மிகவும் மன­வ­ருத்­தத்­திற்­குள்­ளாக்­கி­ய­துடன் மக்­களை சொல்­லொணாத் துய­ரத்­திற்கும் இட்டுச் சென்­றது.
கடந்த 09.07.1995இல் தமி­ழர்­க­ளின்­வாழ்வில் வர­லாற்றில் நவா­லியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோர­மான கொடிய நாளாகும்.
அன்று தான் நவாலி சென்ற்.பீற்றர்ஸ் தேவா­லயம் மற்றும் நவாலி ஸ்ரீக­திர்­காம முருகன் (சின்னக் கதிர்­காமம்) ஆலயம் என்­பன அழிந்து அப்­பா­வி­யான 147 மக்­களைக் காவு கொண்ட கரிநாள்.
வலி­காமம் பூரா­கவும் இடம்­பெற்ற வன் தாக்­கு­தலில் அதிர்ந்து கொண்­டி­ருந்த வேளையில் மாலை நேரத்தில் மக்கள் இடம் பெயர்ந்­து­கொண்­டி­ருந்த வேளையில் விமானப் படை­யி­னரால் மிலேச்­சத்­த­ன­மாக தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.
வட­மா­கா­ணத்தின் கீழ் யாழ்.மாவட்டம் வலி­காமம் தென்­மேற்கின் நவா­லி­யூரில் வர­லாற்றில் இந்த இரத்­தக்­கறை படிந்த நாட்­களை பலி­யெ­டுப்பு நிகழ்­வு­களை தமி­ழினம் மறக்­காது மறக்­க­மு­டி­யாது என்று அன்­றைய நிகழ்­வை­யொட்டி லண்டன் பி.பி.சி. தமி­ழோசை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்­டது.
முன்­னோக்கிப் பாய்தல் (LeapForward) எனப் பெயர் கொண்ட “லீப் போர்வேர்ட்” இரா­ணுவ நட­வ­டிக்­கையை வலி­காமம் பகு­தியில் தொடங்­கிய இரா­ணு­வத்­தினர் பலா­லி­யி­லி­ருந்தும் அள­வெட்­டி­யி­லி­ருந்தும் மிகக் கொடூ­ர­மான முறையில் ஷெல் தாக்­கு­தல்­க­ளையும், குண்டுத் தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.
திடீ­ரென 09.07.1995 அன்று வலி­காமம் தென்­மேற்கு, வலி­காமம் மேற்கு, வலி.தெற்கு, வலி.வடக்கு பகு­தி­யில் உள்ள மக்கள் குடி­யி­ருப்­புக்கள், ஆல­யங்கள், பொது நிலை­யங்கள், அரச மற்றும் பொது நிறு­வ­னங்­களை நோக்கி காலை 5.20 மணி­யி­லி­ருந்து விமானத் தாக்­கு­தல்­களும் ஷெல் தாக்­கு­தல்­களும் தாறு­மா­றாக பாரிய சத்­தங்­க­ளுடன் நடத்­தப்­பட்­டன.
அவ்­வே­ளையில் சகல வீதி­க­ளிலும் ஹெலி­கொப்­டர்கள் தாக்­குதல் அகோ­ர­மான ஷெல் தாக்­கு­தல்­க­ளினால் வீதிக்கு வீதி காயப்­பட்­ட­வர்கள், இறந்­த­வர்கள், காய­ம­டைந்து இரத்தம் சிந்­திக்­கொண்­டி­ருந்­த­வர்­களை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கொண்டு செல்ல வாக­னங்கள் இல்லை.
வாக­னங்­களை இயக்­கு­வ­தற்­கான எரி­பொ­ருட்­களும் அற்ற பொரு­ளா­தார தடை­யான பெரு­மந்­த­மான காலப்­ப­கு­தி­யாகும்.
இதே­நேரம் காய­ம­டைந்­த­வர்கள் ஏதோ­ஒரு வழியின் ஊடாக எடுத்துச் செல்­லப்­பட்டால் அவர்­களை காப்­பாற்ற மருந்­த­கங்­களோ வைத்­தி­ய­சா­லை­களோ இயங்க முடி­யாத அவலநிலை. வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் மருந்­து­களோ வைத்­தி­யர்­களோ காணப்­ப­டாத சூழ­லு­மாக இருந்­தது. இறு­தியில் காய­ம­டைந்­த­வர்கள் சிகிச்­சை­யின்றி இறந்த நிகழ்­வு­க­ளையும் நாம் மறக்­க­மு­டி­யாது.
அன்­றைய தினம் குடா­நாட்டின் பல்­வேறு வீதி­களின் ஊடாக நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆல­யத்­திலும் நவாலி சின்­னக்­க­திர்­காம முருகன் ஆல­யத்­திலும் தாகம் தீர்ப்­ப­தற்­காக அமர்ந்து களைப்­பா­றினர். படுத்து உறங்­கினர்.
அவ்­வே­ளையில் யாழ். நகரப் பகு­தியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்­டி­ருந்த விமானம் தொடர்ச்­சி­யாக விமானம் மூலம் 13 குண்­டுகள் தான்­தோற்­றித்­த­ன­மாக மக்கள் ஒன்று கூடி­யி­ருந்த மேற்­படி இரு ஆல­யங்கள் மீதும் வீசப்­பட்­டன.
அவ்­வ­ள­வுதான்!
நவாலி கிராமம் ஒரு கணம் அதிர்ந்­தது. வீதிகள் தடைப்­பட்டு, மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரை­மட்­ட­மாகி, மதில்கள் வீழ்ந்து பாரிய புகை­மூட்டம் காணப்­பட்­டது.
நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவா­ல­யமும் நவாலி சின்­னக்­க­திர்­காம முருகன் ஆல­யமும் மாலை 5.45 மணி­ய­ளவில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் அதிர்ந்­தன. முற்­றாக அழிந்து சிதைந்­தன.
சுமார் 147 பேர் அந்த இடத்­தி­லேயே குடா­நாட்டின் பல்­வேறு இடங்­களைச் சேர்ந்­த­வர்கள் பலி­யா­னார்கள். இந்த நிகழ்வில் இக்­கொ­டூரச் சாவா­னது கையி­ழந்து, காலி­ழந்து தலை­யி­ழந்து, உடல் சிதறி குற்­று­யி­ராகக் கிடந்த நிகழ்­வு­களை எம்மால் இல­குவில் மறந்து விட­மு­டி­யாது.
சுமார் 360 இற்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்து சிகிச்சை அளிக்­காத நிலையில் நீண்­ட­நேரம் இரத்தம் சிந்தி பலர் உயிர் இழந்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.
அன்­றைய தாக்­கு­தலில் பொது மக்கள் சேவையில் பங்கு கொண்ட சில்­லாலை பிரிவு சிரேஷ்ட கிராம அலு­வ­ல­ரான பிலிப்­புப்­பிள்ளை கபி­ரி­யேல்­பிள்ளை, கிராம அலு­வலர் செல்வி ஹேம­லதா செல்­வ­ரா­ஜாவும் உள்­ளிட்ட அரச சேவை­யா­ளர்கள் பலர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர்.
அன்­றை­ய­தினம் மக்கள் தொண்டுப் பணியில் ஈடு­பட்டு உணவு, குடிநீர் வழங்கி கொண்­டி­ருந்த 48 தொண்­டர்­களும் அந்­தந்த இடத்தில் துடி­து­டித்து உயிர் இழந்­ததை மறக்­க­மு­டி­யாது. இதனை நினைவு கூரு­மு­க­மாக இவ்­வ­ருடம் இன்று வியா­ழக்­கிழமை மாலை 5 மணிக்கு நவாலி சென்ற் பீற்றர்ஸ் திறந்த வெளியரங்களிலும் நவாலி ஸ்ரீகதிர்காம கந்தன் முருகன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவத்திரு மாரிமுத்து பத்மநாதன் தலைமையில் காலையிலும் மாலையிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
மேற்படி 1995.07.09 ஆம் திகதி படுகொலை தொடர்பாக நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும் நவாலி சென்ற் பீற்றர் ஆலய பகுதியிலும் படுகொலை சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் ஜூலை 9ஐ தமிழர் தேசம் என்றும் மறந்திடாது.
செ. ரமேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here