தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வுகள் – 2021, இணையவழியாக சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றியினைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தினால் லெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-
வணக்கம் !
தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வுகள் – 2021, இணையவழியாக சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மனமார்ந்த நன்றியும் பாராட்டுதல்களும்.
இடர்மிகு சூழலிலும் தமக்குக் கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தமிழ் வகுப்புகளை நடத்தி வருவதோடு, இந்த அரையாண்டுத் தேர்வினை இணையவழியாக நடாத்திய எமது புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, தடைகளைத் தாண்டி, ஐயங்களைக் களைந்து, தேர்வை வெற்றிகரமாக நடாத்த உதவிய அனைத்து நிர்வாகிகளுக்கும், தமிழ்ச்சங்கங்ளுக்கும். ஆசிரியர் குழாமிற்கும், பெற்றோருக்கும், தமிழார்வலர்களுக்கும் மீண்டும் நன்றி.
எவ்விடர்மிகு சூழலிலும் தமிழ் மொழித்தேர்வை நடாத்துவதற்கான பட்டறிவைப்பெற்றுள்ள நிலையில், அடுத்த பொதுத்தேர்விற்கு இன்றிலிருந்தே அணியமாகும் மனவுறுதியை இந்த அரையாண்டுத் தேர்வு தந்துள்ளது. தொடர்ந்தும் தங்களது ஒப்பற்ற உழைப்பையும் ஒத்துழைப்பையும் நல்கி, தமிழ் மொழியின் இருப்பிற்கும் உயிர்ப்பிற்கும் துணைநிற்போம் என உறுதி கொள்வோம்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.ASSOCIATION TAMOULCHOLAI
165 Bd de la Villette75010 ParisFRANCE
இணையம்: http://tamoulcholai.frதொலைபேசி எண்: 09 84 06 38 83புதன் – ஞாயிறு : 14.30 -19.30
‘’நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்’’